அடிக்கடி மின்தடை செய்யாதிங்க: கொங்கு பவர்லூம்ஸ் சங்கத்தினர் மனு

அடிக்கடி  மின்தடை செய்யாதிங்க: கொங்கு பவர்லூம்ஸ் சங்கத்தினர் மனு
X

குமாரபாளையம் கொங்கு பவர்லூம்ஸ் சங்கத்தினர் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் பள்ளிபாளையம் மின்வாரிய தலைமை பொறியாளர் மோகனிடம் மனு கொடுத்தனர்.

குமாரபாளையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என கொங்கு பவர்லூம்ஸ் சங்கத்தினர், பள்ளிபாளையம் மின்வாரியத்தில் மனு கொடுத்தனர்.

குமாரபாளையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், விசைத்தறி உள்பட பல்வேறு தொழில்கள், வணிகர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, அடிக்கடி மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என கொங்கு பவர்லூம்ஸ் சங்கத்தினர் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில், பள்ளிபாளையம் மின்வாரிய தலைமை பொறியாளர் மோகனிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையத்தில் பிரதி அமாவாசை தோறும் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அடிக்கடி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், ஜவுளி உற்பத்தி பாதிப்பு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருமானம் இழப்பு ஆகியவை ஏற்படுகிறது. மின் பராமரிப்பு பணியை அமாவாசை நாளில் மட்டும் செயல்படுத்த பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனு வழங்கியபோது, சங்க நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture