கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு குமாரபாளையத்தில் மலரஞ்சலி

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு குமாரபாளையத்தில் மலரஞ்சலி
X

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  கார்கில் 22ம் ஆண்டு வெற்றிவிழாவையொட்டி,  உயிரிழந்த வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கார்கில் போரில் தியாகம் புரிந்த வீரர்களுக்கு, குமாரபாளையத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கார்கில் போர் 22ம் ஆண்டு வெற்றிவிழா, தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது பற்றி என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கூறுகையில், கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியராக பிறந்த நாம் அனைவரும், இந்தியாவை காப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது என்றார்.

Tags

Next Story
பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!