பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
X
பள்ளிபாளையம் கண்டி புதூர் நான்கு வழி சாலை சந்திப்பில் பள்ளிபாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் மற்றும் கண்டி புதூர் நான்கு வழி சந்திப்பில் இன்றைய தினம் பள்ளிபாளையம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச கபசுரக் குடிநீர் மற்றும் இலவச முகக் கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி என்பது நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், நகர பொறுப்பாளர்கள்கங்கா மற்றும் பாலாஜி ஈஸ்வரன் மகளிரணி மைதிலி, இளைஞரணி குமாரவேல் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பள்ளிபாளையம் பகுதியில் 400 பேருக்கும் கண்டிபுதூர் போலீஸ் சந்திப்பில் 400 பேருக்கும் காலை முதலே இருந்து கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி என்பது பள்ளிபாளையம் நகரம் முழுவதும் நாளுக்கு நாள் ஒவ்வொரு பகுதியில் வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் நம்மிடையே தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!