குமாரபாளையத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

சி.நா.பாளையம் ஆரம்பப்பள்ளியில் உள்ள காமராஜர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள் விழா, இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சி.நா.பாளையம் ஆரம்பப்பள்ளியில் உள்ள காமராஜர் சிலைக்கு, குமாரபாளையம் திமுக சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தபட்டது.

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாக பகுதியில் பத்து மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் எம்.செல்வம், என்.விஸ்வநாதன், மா. அன்பரசு கே.ஏ. ரவி, எஸ். ராஜ்குமார், ஆர்.ரங்கநாதன், அ.வெங்கடேசன், குப்புராஜ் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு