காளியம்மன் கோயில் சக்தி அழைப்பு: முளைப்பாரியுடன் பங்கேற்ற பெண்கள்

காளியம்மன் கோயில் சக்தி அழைப்பு: முளைப்பாரியுடன் பங்கேற்ற பெண்கள்
X

குமாரபாளையம் காளியம்மன் கோயில் சக்தி அழைப்பில் முளைப்பாரியுடன் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

குமாரபாளையம் காளியம்மன் கோயில் சக்தி அழைப்பில் முளைப்பாரியுடன் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன் கோயில் மகா குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று மகா குண்டம், பூ மிதித்தல் வைபவத்தையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெண்கள் முளைப்பாரியுடன் பெருமளவில் பங்கேற்றனர். நாளை தேர்த்திருவிழா, வண்டு வேடிக்கை, நாளை மறுநாள் தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை,அம்மன் திருகல்யாணம், மஞ்சள் நீர் உலா, அலங்கார, ஆராதனை திருவீதி உலா ஆகியன நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல் வைபவம் இன்று நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில் தினமும் கட்டளைதாரர்கள் சிறப்பு வழிபாடு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி காளியம்மன், சக்தி மாரியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு பூ மிதித்தல் விழாவையொட்டி மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது. மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்ரமணி, நந்தகுமார், சண்முகம், கிருஷ்ணராஜ், தங்கராசு மற்றும் குண்டம் பராமரிப்பு குழுவினர் செய்து வருகின்றனர். பிப். 28, மார்ச். 1, மார்ச். 2 ஆகிய 3 நாட்களும் பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!