குமாரபாளையம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!
காளியம்மன் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது.
குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. 17ம் தேதி காலை கணபதி பூஜை, பூர்வாங்க பூஜைகள், காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. 18ம் தேதி நவகிரக ஹோமம், பூமி பூஜை செய்து மண் எடுத்தல், ஜன. 19 அஷ்ட லட்சுமி ஹோமம், முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்து முடிந்தது. ஜன. 20ம் தேதி காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
இன்று ஜன. 21 காலை 06:30 மணிக்கு நான்காம் கால பூஜையுடன், காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. ஆச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். இன்று இரவு உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படவுள்ளன.
இந்த கும்பாபிஷேக விழாவை பவானி காளிங்கராயன்பாளையம் மணிகண்டன் சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் சதாசிவம் மற்றும் குழுவினர் சார்பில் நடத்தப்பட்டது. குமாரபாளையம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று காலையம்மனை தரிசித்து ஆசிபெற்றனர்.
குராபிஷேக ஏற்பாடுகளை கோவில் விழா பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu