/* */

குமாரபாளையத்தில் வான வேடிக்கையுடன் காளியம்மன் திருவிழா

குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வான வேடிக்கை நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வான வேடிக்கையுடன் காளியம்மன் திருவிழா
X

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் வான வேடிக்கை நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் கோயில் மகா குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன் தினம் மகா குண்டம், பூ மிதித்தல் வைபவத்தில் ஐந்தாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற குண்டம் இறங்கினர். நேற்று காலை அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா துவங்கியது. பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ராஜா வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, வழியாக வந்த தேர் புத்தர் வீதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் இங்கிருந்து வடம் பிடித்து இழுத்து சென்று காளியம்மன் கோயில் அருகே பக்தர்கள் நிலை சேர்த்தனர். நேற்று இரவு காவிரி ஆற்றில் வான வேடிக்கை நடைபெற்றது. இதனை காவிரி பழைய மற்றும் புதிய பாலங்கள், காவிரி ஆற்றின் மணல் பகுதி, பவானி காவிரி கரையோர பகுதி மக்கள் என பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல் வைபவம் நடைபெற்றது . நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

Updated On: 4 March 2023 12:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்