கலிக்கம் சித்த வைத்திய முகாம்
குமாரபாளையத்தில் நடந்த கலிக்கம் சித்த வைத்திய முகாம்
குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கலிக்கம் சித்த வைத்திய முகாம் முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
இது பற்றி சித்தா டாக்டர் கார்த்தி கூறியதாவது: கலிக்கம் என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர் பாரம்பரியமாக கையாண்டு வந்த சில அரிய மூலிகை சாற்றை கண்ணில் விடுவதால் விஷக்கடி, தேமல், வெண்படை, கரும்படை, சொரியாஸிஸ் மற்றும் அனைத்து தோல் நோய்களும் தீருகிறது. தோல் நோய் உள்ளவர்கள் முசக்காத்தான் இலை, குப்பைமேனி இலை, வேப்பிலைமூன்றும் சம அளவில் வைத்து 10 மிளகுடன் அரைத்து 2 நாளைக்கு ஒரு தடவை இரவில் பூசிக்கொள்ள வேண்டும்.
அவசியம் அசைவம். கத்தரிக்காய், புளி தவிர்க வேண்டும். ஒருவர் மூன்றுமுறை மருந்திட்டு நோய் நீக்கம் பெறலாம்.கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும், நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.
இந்தக் கண்ணில் விடும் மருந்துகள் கண்ணில் உள்ள நோய்களைக் குணமாக்குவதோடு, இரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலப்பதன் மூலம், உடலில் ஏறிய விஷம், வர்மம், வாதம், நெடு மயக்கம்(கோமா),5) மூளையில் ஏற்படும் இரத்த உறைவு(அதன் மூலம் ஏற்படும் பக்க வாதம்)ஆகியன தீரும். ஐ.ஒ.எல் லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu