குமாரபாளையத்தில் இன்று காளியம்மன் கோவில் மறு பூச்சாட்டு விழா

குமாரபாளையத்தில் இன்று காளியம்மன் கோவில்   மறு பூச்சாட்டு விழா
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவையொட்டி அம்மன் காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் ஆகிய முப்பெரும் தேவியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் மறு பூச்சாட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மாசித்திருவிழாவான அனைத்து சமூக காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா பிப். 22ல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று மறு பூச்சாட்டு விழா இரவு 10:00 மணியளவில் நடைபெறுகிறது. குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு விழா நடைபெறவுள்ளது.

காளியம்மன் கோவிலில் நாளை காலை 10:00 மணியளவில் கொடியேற்று விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். கள்ளிபாளையம் காளியம்மன் கோவிலில் இன்று மறு பூச்சாட்டு விழா நடைபெறவுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!