குமாரபாளையத்தில் இரு பாலருக்கான கபாடி போட்டி

குமாரபாளையத்தில் இரு பாலருக்கான கபாடி போட்டி
X

குமாரபாளையத்தில் மாநில அளவிலான ஆண்களுக்கான கபாடி போட்டி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் இரு பாலருக்கான கபாடி போட்டி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, நண்பர்கள் கபாடி குழு சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி நடைபெற்றது. இந்த கபாடி போட்டியில் பெண்கள் பிரிவில் 30 அணிகளும், ஆண்கள் பிரிவில் 105 அணிகளும் கலந்து கொண்டனர்.

நாமக்கல், சேலம், ஈரோடு, சென்னை, கரூர், கடலூர், திருச்சி, மதுரை, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி என தமிழக முழுவதும் இருந்து கலந்து கொண்ட அணிகளுக்கு இடையே தொடர் போட்டியாக நடைபெற்றது.

இதில் பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த சக்தி அணியினர் முதல் பரிசு பெற்றனர். அதை தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான கபாடி போட்டியில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஏ.எம்.கே.சி. அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் சேவற்கொடியோர் பேரவை அணியினர் இரண்டாம் பரிசும், சங்ககிரி சுவாமி அகாடமி அணியினர் மூன்றாவது பரிசும், குமாரபாளையம் ராஜா பிரதர்ஸ் அணியினர் நான்காம் பரிசும், சுழற்கோப்பைகளும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!