கல்வி ஒளியேற்றிய ஜே.கே.கே. நடராஜா ஐயாவுக்கு 26ம் ஆண்டு நினைவு நாள்
ஜே.கே.கே.என். கல்வி நிறுவனர் ஐயா நடராஜா.
குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் கல்வியில் புரட்சி ஏற்படுத்தியவரும், கொடைவள்ளலாக விளங்கியவருமான ஜே.கே.கே.நடராஜா ஐயாவுக்கு இன்று 26வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கல்விப்பணியில் அறியப்பட்டவராக ஐயா ஜே.கே.கே.நடராஜா விளங்கினார். ஏழ்மையில் இருந்து கல்வி பயில முடியாதவர்களுக்கு இலவச கல்வி வழங்கினார். இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக வளர பாடுபட்டவர்.
இன்று ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கொடைவள்ளல் அமரர் திரு.ஜே.கே.கே.நடராஜா ஐயா அவர்களின் 26வது நினைவு தினம். அதையொட்டி குமாரபாளையம், வட்டமலையில் அமைந்துள்ள ஜே.கே.கே.என். கல்லூரி வளாகத்தில் அவரது நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்வில் கல்விக்குழும தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர்கள் ஓம் சரவணா, ஐஸ்வர்யா ஓம் சரவணா மற்றும் அவர்களது குழந்தைகள் ஐயாவின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து நிர்வாக முக்கியஸ்தர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் ஜே.கே.கே .என். கல்லூரிகளின் முதல்வர்கள்,துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,நிர்வாக அலுவலர்கள்,பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu