மண்டல அளவிலான தடகளப் போட்டியில் ஜேகேகேஎன் கல்லூரி மாணவி வெற்றி!

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் ஜேகேகேஎன் கல்லூரி மாணவி வெற்றி!
X
மண்டல அளவிலான தடகளப் போட்டியில் ஜேகேகேஎன் கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற ஜேகேகேஎன் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அண்ணா பல்கலைகழக கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் அமைந்துள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றன. இதில் ஜேகேகேஎன் பொறியியல் கல்லூரியின் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கும் ஆர். கௌசிகா கலந்து கொண்டார்.

Zonal பிரிவில் மொத்தம் 30 கல்லூரிகளிலிருந்து 450 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 400 மீட்டர் பிரிவில் மொத்தம் 24 பேர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. 800 மீட்டர் பிரிவிலும் மொத்தம் 24 பேர் பங்கேற்று கடுமையான போட்டி அளித்தனர்.

இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்ட மாணவி ஆர். கௌசிகா இரண்டிலும் சாதனை படைத்துள்ளார். 800 மீட்டர் தடகள பிரிவில் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 400 மீட்டர் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு ஜே.கே.கே.என் கல்வி நிறுவனத்தின் மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீமதி என். செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. எஸ். ஓம்ஷரவணா ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். உடற்கல்வி இயக்குநர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த நடைபெறவுள்ள அண்ணா பல்கலைகழக கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான விளையாட்டு நிகழ்விலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இந்த வெற்றிகளின் மூலம் தொட்டியத்தில் அமைந்துள்ள கொங்குநாடு கல்வியியல் கல்லூரியில் விரைவில் நடைபெற இருக்கும் விளையாட்டு நிகழ்விலும் பங்கேற்க இருக்கிறார் மாணவி ஆர். கௌசிகா.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!