JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு C Cube Technology புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி புலமுதன்மையர், முனைவர். பரமேஸ்வரி மற்றும் சி கியூப் டெக்னாலஜி நிறுவனத்தின் ஈரோடு கிளை வணிக வளர்ச்சித் தலைவர் முஹம்மது ஆஷிக் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் ஈரோடு சி கியூப் டெக்னாலஜி, (C Cube Technology) நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், புலமுதன்மையர், முனைவர். பரமேஸ்வரி மற்றும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு), முனைவர். சீரங்கநாயகி ஆகியோரும் சி கியூப் டெக்னாலஜி நிறுவனத்தின் ஈரோடு கிளை வணிக வளர்ச்சித் தலைவர் முஹம்மது ஆஷிக் மற்றும் வணிக வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை மற்றும் இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான மின் ஆட்டோகேட், ஆர்க்கேட், பிளாக் செயின் தொழில்நுட்பம், இன்டர்நெட் அப்திங்ஸ் எனப்படும் பொருள்களின் இணையம், நெட்வொர்க்கிங், கிலவ்டு கம்ப்யூட்டிங், பெரியதரவு, தகவல் அறிவியல் எனப்படும் டேட்டாசயின்ஸ், ஷன் டிசைனிங் தொடர்பான தொழில் நுட்பங்கள், போட்டோஷாப்,டேலிப்ரைம் GST போன்ற கணினி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தற்பொழுது உபயோகத்தில் உள்ள மென்பொருள்கள் மற்றும் மின்சாதனங்கள் வாயிலாக கல்லூரி வளாகத்திலேயே பயிற்றுவிக்கப்படும்.
இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தொழில்நுட்ப அறிவோடு கற்று வேலை வாய்ப்புகளை எளிதில் பெறமுடியும். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சியாளர் தாமோதரன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu