வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமா பந்தி

வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமா பந்தி
X

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமா பந்தி நடைபெற்றது.

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு வட்டாட்சியர் தமிழரசி தலைமை வகித்தார். நேற்று கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், எலந்தகுட்டை, பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், கொக்காராயன் பேட்டை, படவீடு ஆகிய பகுதி பொதுமக்கள் 92 புகார் மனுக்கள் கொடுத்தனர்.

திருச்செங்கோடு கோட்டாட்சியர் இளவரசி 2ம் நாள் ஜமாபந்தியை தொடங்கி வைத்தார். இன்று சவுதாபுரம், பல்லக்காபாளையம், அய்யம்பாளையம், அய்யம்பாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஜமா பந்தி நடைபெற்றது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!