ஒளிரும் விளக்குகள் அமைக்கும் பணி தொடக்கம்

குமாரபாளையம் சேலம் சாலையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கும் பணி தொங்கியது.
குமாரபாளையம் சேலம் சாலையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கும் பணி தொடகியது.
குமாரபாளையம் சேலம் சாலை பழைய காவேரி பாலம் முதல் கத்தேரி பிரிவு வரை சுமார் இரண்டு கி.மீ. தூரம் உள்ளது. இதில் அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நெடுச்சாலைத்துறை சார்பில் சாலையின் இருபுறமும் ஒளிரும் விளக்குகள், சாலைகள் சந்திப்பு பகுதியில் எச்சரிக்கை பலகைகள், முக்கிய இடங்களில் வேகத்தடைகள், ஆகியவை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல ஏதுவாக இருப்பதுடன், விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
பலர் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து தங்கள் வியாபார நிறுவன விளம்பர தட்டிகள் வைத்திருத்தல், வாகனங்கள் நிறுத்தி வைப்பது, தார்ப்பாய் போட்டுக்கொள்வது, கட்டில் கடைகள் போட்டுக்கொள்வது, தள்ளுவண்டி கடைகள் அமைப்பது உள்ளிட்டவைகள் செய்வதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது. விபத்துகளால் பலரும் பாதிக்கப்படாமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சொல்வதை கேட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்டாமல் இருந்தால், ஆக்கிரமிப்பு வாகனங்கள், போர்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu