டிவைடர்கள் முகப்பில் ஒளிரும்விளக்குகள் அமைக்க கோரிக்கை

ஒளிரும் எதிரொலிப்பான் இல்லாமல் காட்சியளிக்கும் சாலையின் டிவைடர்
குமாரபாளையத்தில் டிவைடர்கள் முகப்பில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்துகளை தடுத்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் சேலம் சாலையில் நடுவில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு வரை டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஆங்காங்கே மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்களை அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட பலரும் கட்சிக் கொடிகளை கட்டுவது, வியாபார நிறுவனங்களின் விளம்பர பதாதைகள் வைப்பது, கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைப்பது என கட்டி வருகிறார்கள்.
கட்சிக் கொடிகள் சிறிய குச்சிகளில் கட்டப்படுவதால் அவை காற்றின் வேகத்தில் கம்பத்தில் சேர்ந்து இருக்காமல், சாலை பக்கமாக சாய்ந்து விடுகிறது. இதனால் டூவீலர்கள் ஓட்டுனர்களின் முகத்தில் உரசி நிலை தடுமாறி பலரும் கீழே விழுந்து காயமடைந்து வருகிறார்கள். மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, வர்த்தக நிறுவனத்தார் விளம்பர பதாதைகள் கட்டவும், கட்சிக்கொடிகள் கட்டவும், கண்ணீர் அஞ்சலி பேனர்கள் கட்டவும் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu