குமாரபாளையம் அருகே பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

குமாரபாளையம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பையொட்டி குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களும் தகுதியான நிலையில் உள்ளதா? என தனியார் கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 233 வாகனங்களில் 210 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ததில், 196 வாகனங்கள் தகுதியான நிலையில் இருந்தது. 14 பள்ளி வாகனங்கள் குறைகள் தெரிவிக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்து, மறு ஆய்வுக்குட்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்படாத 23 பள்ளி வாகனங்களும் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் ஆய்வுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, தாசில்தார் சண்முகவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார், போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
சாலை விதிகள் குறித்து போலீசார் கூறியதாவது:
சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம்.இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
சிவப்பு வண்ண விளக்கு” நில்” என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு”புறப்படு” என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது. சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது.
இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.வாகன ஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள்,மருத்துவமனை,முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.
சாலைவிதிகளை மதிப்போம் விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்” என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து,சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu