குமாரபாளையம் 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

குமாரபாளையம் 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி
X

குமாரபாளையம் 12வது வார்டு சுயேச்சை வேட்பாளர் அழகேசனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார்.

குமாரபாளையம் 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் 12வது வார்டு பகுதியில் அழகேசன் சுயேச்சை, (தீப்பெட்டி) காளீஸ்வரன் சுயேச்சை (வைரம்), சண்முகம் சி.பி.எம்., சத்தியமூர்த்தி (நாம் தமிழர்), மதியழகன் (அ.தி.மு.க.) ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் அப்பகுதி பொதுமக்களிடம் கேட்ட போது, எங்கள் பகுதியில் கல்வி உதவி, திருமண உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல உதவிகளை பதவியில் இல்லாத போதே செய்து கொடுத்துள்ளார். அழகேசன். அவரை போன்ற பொதுநல எண்ணம் கொண்டவரே வெற்றி பெறுவார், என்று கூறினர்.

அதன்படி தி.மு.க. கூட்டணி கட்சி சி.பி.எம். வேட்பாளர் சண்முகத்தை விட 172 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் 130, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியமூர்த்தி 14, சுயேச்சை வேட்பாளர் காளீஸ்வரன் 15 ஓட்டுக்கள் பெற்று டெபாசிட் தொகை இழந்தனர். அழகேசனுக்கு அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!