சுதந்திர தின விழா போட்டிகள்:பரிசளிப்பு விழா

குமாரபாளையத்தில் சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தளிர்விடும் பாரதம் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.
குமாரபாளையத்தில் சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
குமாரபாளையத்தில் சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தளிர்விடும் பாரதம் சார்பில் அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் குமாரபாளையம் நகரம், தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் ஊராட்சி பள்ளிகள் உள்பட 17 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று பரிசுகள் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. சந்தியா, பொதுநல ஆர்வலர் சித்ரா உள்பட பலர் பங்கேற்று பரிசுகள் வழங்கினர். தனியார் பள்ளி முதல்வர் விஜய் பிரபு, தனியார் கல்லூரி பேராசிரியை இந்திராணி, நிர்வாகிகள் பிரபு, வரதராஜன் உள்பட பலர் பங்கேற்று பரிசுகள், சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கினர்.
இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:இந்த விழா மேடையில் இருக்கும் தனியார் கல்லூரி பேராசிரியை இந்திராணி, எஸ்.ஐ. சந்தியாவின் ஆசிரியை. ஒரே மேடையில் ஆசிரியை, போலீஸ் அதிகாரியாக மாணவி இருப்பது எவ்வளவு பெரிய சந்தோசம். நீங்களும் இதே போல் நன்கு படித்தால் இதை விட உயர் பதவிக்கு போகலாம். நம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை மறக்க கூடாது.இவ்வாறு பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu