குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் 75வது சுதந்திர தினவிழா

குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் 75வது சுதந்திர தினவிழா
X

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பங்கேற்று கொடியேற்றி வைத்த தலைவர் செந்தாமரை மற்றும் நிகழ்ச்சிக்கு  முன்னிலை வகித்த இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர்.

குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களில் 75வது சுதந்திர தினவிழா நிகழ்ச்சி கல்வி நிறுவன வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்லூரிகளின் முதல்வர்கள், உயர் அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். முன்னதாக கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தாமரை, இயக்குநர் ஓம்சரவணா ஆகியோருக்கு தேசிய மாணவர் படை சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.

ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தாமரை தேசியக் கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இயக்குநர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார்.

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் முனைவர் வி.ஆர். பரமேஸ்வரி, கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் சீரங்கநாயகி, மற்றும் ஜே.கே.கே.நடராஜா கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!