வெப்படையில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா

வெப்படையில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா
X

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ரிப்பன் வெட்டி கல்வெட்டு திறந்து வைத்தார்.

குமாரபாளையம் அருகே வெப்படையில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வெப்படையில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது. குமாரபாளையம் அருகே வெப்படையில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைந்து, தற்பொழுது காணொளி காட்சி மூலம் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து, மாவட்ட எஸ்பி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏத்தி காவல் நிலைய பணிகளை தொடங்கி வைத்தார்.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் காவல் நிலையங்களில் இருந்து பிரித்து வெப்படை காவல் நிலையம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் 24 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தற்காலிகமான கட்டிடத்தில் இயங்கி வந்த காவல் நிலையத்திற்கு புதியதாக 12,500 சதுர அடி பரப்பில் 96 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணி நடைபெற்றது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணா தலைமை வகித்தார். காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ரிப்பன் வெட்டியும், கல்வெட்டு திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றினார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் அன்றாட பணிகளை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதில் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன், எஸ்.ஐ. மலர்விழி உட்பட ஏராளமான உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture