குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கத்தினர் நீர் மோர் பந்தல் திறப்பு
குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நில முகவர்கள் சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஆலங்காடு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழகத்திலேயே அதிக பத்திரங்கள் பதிவு செய்யும் அலுவலகங்களில் முக்கிய அலுவலகமாக உள்ளது.
இந்த அலுவலகத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்பொழுது கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழ்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் நூற்றுக்கணக்கானோருக்கு தாகம் தீர்க்கும் வகையில், குமாரபாளையம் தாலுக்கா நிலமுகவர்கள் நலச் சங்கத்தின் சார்பில், சங்க தலைவர் சின்னசாமி தலைமையில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
ஆவண எழுத்தர்கள் சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், சண்முகசுந்தரம் பங்கேற்று, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்கள். செயலாளர் செல்லமுத்து, பொருளாளர் சிவராமன் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீர்மோர் பெற்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறந்தது பெரும் பயனாக உள்ளது என பொதுமக்கள் கூறினர்.
குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம்
சார்பில் 4ம் ஆண்டு துவக்க விழா தலைவர் சின்னசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர் மையத்தில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் உள் நோயாளிகளுக்கு பால், பன் வழங்கப்பட்டதுடன், ஏழை மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள், கல்வி உதவித் தொகை, சிகிச்சையில் இருந்து வரும் ஏழை கூலி தொழிலாளிக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கணேசன், சரவணன், பெருமாள், ஆறுமுகம், சண்முகம், ஸ்ரீதர், வடிவேல், லட்சுமணன், மணிவண்ணன், மணி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu