குமாரபாளையத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

குமாரபாளையத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது.
குமாரபாளையத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவையில் 110-விதியின் கீழ் 07.05.2022 அன்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். அதன்படி, குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவையொட்டி குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்,நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், எலந்த குட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், ராஜ், கனகலட்சுமி, கோவிந்தராஜன், விஜயா,திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், செல்வராஜ், சரவணன்,சிவகுமார் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் நகர்நல மைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu