குமாரபாளையத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு

குமாரபாளையத்தில் புதிய மேல்நிலை    குடிநீர்   தொட்டி  திறப்பு
X

குமாரபாளையத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்து குடிநீர் மேனிலை தொட்டிகளை திறந்து வைத்தார்.

குமாரபாளையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மேல் நிலை குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா நடைபெற்றது

குமாரபாளையத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் திறப்பு விழா நடந்தது.

குமாரபாளையம் நகராட்சிகுட்பட்ட காமராஜபுரம், ராஜராஜன் நகர், மஞ்சுளா மில் வீதி ஆகிய பகுதிகளில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க அப்பகுதியினர் நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் கோரிக்கை வைத்தனர். இதன்படி, திட்ட அறிக்கை தயார் செய்து, மேல்நிலைத்தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கட்டுமானப் பணிகள் முழுமை பெற்றுது. இதையடுத்து, நடைபெற்ற திறப்பு விழாவில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்து, குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இதில், நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் பூங்கொடி, வேல்முருகன், தர்மராஜன், கோவிந்தராஜ், ராஜ் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கதிரேசன், சரவணன், ஜூல் பிகார் அலி, ஆனந்தன், கந்தசாமி, வேலுமணி,அருண்குமார் மற்றும் நகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரி சரவணன், உதவி பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ai in future agriculture