குமாரபாளையத்தில் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தெருமுனை விளக்க கூட்டம்

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை குறித்த தெருமுனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். .
பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் ஊரில் இல்லை என்று காரணம் கூறி, பேச்சுவார்த்தை தள்ளிக்கொண்டே போனது. பிப்.11ல் உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த விசைத்தறி தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து, கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய், என்று கண்டன கோஷமிட்டனர்.
விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை பிப். 17ல் நடைபெறும் என தாசில்தார் கூறியுள்ளார்.
இதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி தலைமையில் தெருமுனை விளக்க கூட்டம் பல பகுதிகளில் நடைபெற்றது. நிர்வாகிகள் சரவணன், செல்வராஜ், சுப்பிரமணி, நஞ்சப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu