குமாரபாளையத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் பிரிவில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் நகரம், ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் பள்ளிபாளையம் பிரிவில் நடந்தது. தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அமைச்சர் புதல்வர் தரணிதரன், முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன், முன்னாள் நகர செயலர் குமணன், நகர துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் பழனிச்சாமி, நிர்வாகிகள் ரவி, தேவதாஸ், முருகேசன், உள்பட பலர் பங்கேற்றனர். ராஜம் தியேட்டர் அருகே நடந்த மனித சங்கிலி ஆர்பாட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன் தலைமை வகித்தார்.

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. வடக்கு ஒன்றிய அவைத்தலைவர், எலந்தகுட்டை ஊராட்சி தலைவர் வெங்கடேசன், படைவீடு பேரூர் செயலர் ஜகந்நாதன், ஒன்றிய துணை செயலர் திருமூர்த்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!