இடியும் நிலையில் காவிரி கரையோர வீடுகள்: வெளியேற பொதுமக்கள் மறுப்பு

இடியும் நிலையில் காவிரி கரையோர வீடுகள்: வெளியேற பொதுமக்கள் மறுப்பு
X

குமாரபாளையத்தில் நீரில் ஊறி இடியும் நிலையில் காவிரி கரையில் உள்ள வீடுகள்.

குமாரபாளையத்தில் நீரில் ஊறி இடியும் நிலையில் காவிரி கரையோர வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற மறுத்து வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் நீரில் ஊறி இடியும் நிலையில் காவிரி கரையில் 6 வீடுகள் உள்ள நிலையில் பொதுமக்கள் வெளியேற மறுத்து வருகிறார்கள்.

இது பற்றி வருவாய்த்துறையினர் கூறுகையில், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர் பகுதியில், காவிரி வெள்ளம் காரணமாக 6 வீடுகளின் சுவர் நீரில் ஊறிய நிலையில் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதில் உள்ளவர்களை மண்டபத்தில் வந்து தங்கும் படி கூறியுள்ளோம்.

முதலில் வர மறுத்தனர். பின்னர் அபாயத்தை எடுத்து சொன்னபின் மண்டபத்தில் வந்து தங்க ஒத்துக்கொண்டனர். தற்காலிகமாக வாடகை வீடு பார்த்து தங்க கூறியுள்ளோம். இலவச வீடுகள் கட்டுமான பணி நிறைவு பெற்றதும், இலவச வீடுகள் இவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!