பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட   உயர்மட்ட பாலம்
X

குமாரபாளையம் அப்பன் பங்களா பகுதியில் உயர்மட்ட பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது

குமாரபாளையம் நகராட்சி தலைவர் நடவடிக்கையின் பேரில் பாலம் கட்டுமான பணி சில மாதங்கள் முன்பு துவங்கியது

குமாரபாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உயர்மட்ட பாலம் திறந்து விடப்பட்டது.

குமாரபாளையம் அப்பன் பங்களா பகுதியில் கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளம் உள்ளது. இதன் மேல் தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மழை காலங்களில் தரை மட்ட பாலம் மூழ்கி, சாலை துண்டிக்கபட்டால், பொதுமக்கள் பல கி.மீ.தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க பல வருடங்களாக கோரிக்கை வைத்தனர். அதன்படி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நடவடிக்கையின் பேரில் பாலம் கட்டுமான பணி சில மாதங்கள் முன்பு துவங்கியது. தற்போது இந்த பாலம் கட்டுமான பணிகள் யாவும் முழுமை பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, அப்பன் பங்களா பகுதியில் கழிவு நீர் பள்ளம் உள்ளது. இதன் மீது தரைமட்ட பாலம் இருந்தது. கோம்பு பள்ளத்தில் கழிவுநீர் அதிகரித்தாலும், மழை வந்தாலும் இந்த பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் இந்த வழி துண்டிக்கப்பட்டு பல கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. இவ்வழியே உள்ள தனியார் பள்ளியில் பல்லாயிரம் மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் பல கி.மீ. தூரம் சுற்றித்தான் பள்ளிக்கு சென்றாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. தொடர் மழை வந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணனிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில் பணிகள் துரிதப்படுத்த விஜய்கண்ணன் உத்திரவிட்டதன் பேரில், பணிகள் நிறைவு பெற்று தற்போது டூவீலர்கள் செல்லும் அளவிற்கு பாதை திறக்கப்பட்டது.

அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, அப்பன் பங்களா பகுதியில் தமிழக முதல்வரால் காணொளி மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட 2 கோடி மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. பல மாதங்களாக நடைபெற்ற நிலையில், கடும் மழையின் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த வழியில் விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள், கோவில்கள், தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன. பாலம் கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், சுமார் 3 கி.மீ.தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரித்த ஜவுளிகளை கொண்டு போக முடியாமலும், ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல், ஸ்பின்னிங் மில்லுக்கு தேவையான பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பல கி.மீ.தூரம் சுற்றி சென்றாலும் மிக குறுகலான பாதை என்பதால் லாரிகள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்பட்டது. உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மருத்துவமனை செல்ல சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் ஒரே நேர் வழியில் சென்றால் மின்மயானம் செல்லலாம். இறப்பு ஏற்பட்டாலும் பல கி.மீ.தூரம் சுற்றிதான் மின் மயானம் கொண்டு செல்லும் நிலையும் நீடித்து வந்தது. தற்போது பொதுமக்கள் வேண்டுகோளின்படி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டு கொண்டு வர சேர்மன் விஜய்கண்ணன் முழு முயற்சி எடுத்துள்ளதாக அவர்கள் கூறினார்கள்.



Tags

Next Story
ai in future agriculture