பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக டிராஃபிக்..! வாகன ஓட்டிகள் அவதி!
படவிளக்கம் :
பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவசர தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி பாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், பள்ளிபாளையம் பழைய பாலம் சாலை அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக கனரக வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்டவை அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பள்ளிபாளையம் புதுப்பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் ஈரோட்டில் இருந்து வந்ததால், எதிரெதிர் திசையில் அதிகளவு வாகனங்கள் நின்று, செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர் .மேலும் அவசர தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து உள்ளூரில் இருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.அவ்வப்போது இதுபோல போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu