பவானி பகுதிகளில் கன மழை

பவானி பகுதிகளில் கன மழை
X

 பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது

பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. நேற்று அதிகாலை முதல் வனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது.

தொடர்ந்து லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை படிப்படியாக அதிகரித்து கனமாக பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது.

இடி, மின்னல் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் காலை நேரத்தில் பல்வேறு வேலைகளுக்காக புறப்பட்டு சென்ற பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடைகள் முன்பாக மழை நிற்பதற்காக காத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!