குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
X

குமாரபாளையம் விட்டலபுரி ராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்.

குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.

குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதே போல் திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. விட்டலபுரி ராமர் கோவில், பாண்டுரங்கர் கோவில், பவர் ஹவுஸ் வீர ஆஞ்சநேயர் கோவில், கள்ளிபாளையம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் வி.ஹெச்.பி.சார்பில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சீரடி சாய்பாபா கோவிலில் கொண்டாடப்பட்டது. நகர செயலர் சிவகாமசுந்தரம், நிர்வாகி முருகேசன் தலைமை வகித்தனர். சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பஜ்ரங்தாள் மாவட்ட அமைப்பாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!