எங்கே செல்லும் இந்த பாதை? அதிர்ச்சி தரும் குமாரபாளையம் சிறுமி பாலியல் சம்பவம்
பாலியல் கொடுமை கார்ட்டூன் படம்
குமாரபாளையத்தை அதிர வைத்த சிறுமி பாலியல் விவகாரம்.
போக்சோ சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்னரும் கூட கற்பழிப்பு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. பெண்களை போகப்பொருளாக நினைக்கும் இந்த சமூகம், பெண்ணை பெண்ணாக எப்போது மதிக்கிறதோ அன்றுதான் இதைப்போன்ற சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
கொடுமை என்னவெனில் சிறுமிகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவது. வாழ்க்கையைப்பற்றி எதுவுமே தெரியாத வயதில் அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பது மிருகத்தனம் அல்லவா? டில்லியில் நிர்பயா கற்பழிப்பு சம்பவத்துக்கு அன்று நாடே திரண்டு போராட்டம் நடத்தியது. தமிழகத்திலும் போராட்டம் நடந்தது. ஆனால் , ஏதோ ஒரு சிறு நகரத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அரங்கத்துக்கு வருவதில்லை. அதே நிலைதான் குமாரபாளையம் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையும். கூட்டு பாலியல் கொடுமையை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளனர். அரசுப்பணியில் இருக்கும் ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னரே இந்த கொடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெண்கள் அமைப்பு இதுகுறித்து எந்த அதிர்ச்சியும் வெளியிடவில்லை. சராசரி நிகழ்வாக கடந்து செல்கிறோம். இந்த சமூகம் எந்த பாதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி எமக்குள் எதிர்கால பயத்தை ஏற்படுத்துகிறது. உறவுகளின் மேன்மை தெரியாத, உறவுகளின் மதிப்பு அறியாத சமூகத்தில் மட்டுமே இதைப்போன்ற கொடூரங்களும் நடக்கும். இந்த கொடுமை இந்த சமூகத்தின் மீதான காயம் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இன்னொரு சம்பவம் நடந்துவிடாதபடி தடுக்கவேண்டியதும் நமது கடமை. இன்னும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu