/* */

சங்ககிரி கோட்டத்தில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! தேதி அறிவிப்பு..!

சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சங்ககிரி கோட்டத்தில் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! தேதி அறிவிப்பு..!
X

ஜன. 10ல் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜன. 10ல் நடைபெறவுள்ளது

இது குறித்து சங்ககிரி செயற்பொறியாளர் உமாராணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜன. 10ல் காலை 11:00 மணி முதல் 01:00 மணி வரை, செயற்பொறியாளர், மின்வாரிய அலுவலகம்,சங்ககிரி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் மின்தடை குறித்து மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மின்வாரிய அதிகாரிகள் வசம் மனு கொடுக்கப்பட்டது.

குப்பாண்டபாளையம் மின் பகிர்மான கழகத்திற்குட்பட்ட பகுதிகளான குள்ளநாயக்கன்பாளையம், குப்பாண்டபாளையம், சீராம்பாளையம், சானார்பாளையம்,மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் மேற்கண்ட பகுதிகளில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கிடவேண்டி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மின்வாரிய உதவி இயக்குனர் வசம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சித்ரா தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

குமாரபாளையம் நெசவுத்தொழில் அதிகமுள்ள பகுதியாக உள்ளது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. மின்தடை ஏற்படும் நேரங்களை அறிவித்து தடை செய்தால் காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி,கல்லூரி செல்பவர்களுக்கு சமையல் செய்து கொடுப்பது கஷ்டமாக இருக்கும் சூழல் ஏற்படுகிறது.மின்தடை ஏற்படுத்துவதற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் பொதுமக்கள் வேறு வேலைகள் இருந்தால் அதை செய்து முடித்துவிட்டு தங்களது பணிகளை மீண்டும் தொடங்குவார்கள் தாங்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்தடை ஏற்படுவதை முன்கூட்டி தெரிவிக்குமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Updated On: 9 Jan 2024 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 3.10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா
  2. திருவண்ணாமலை
    உலக சுற்றுச்சூழல் தின விழா: மரக்கன்று நட்டு துவக்கி வைத்த ஆட்சியர்
  3. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறைக்கு சீல் வைப்பு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வந்தவாசி
    ஆரணி தொகுதியில் திமுகவினர் வெற்றி ஊர்வலம்!
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி
  8. திருவண்ணாமலை
    வைகாசி அமாவாசை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு மகா அபிஷேகம்!
  9. அரசியல்
    உ.பி.யில் பா.ஜ.விற்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் மோடியா? யோகியா?
  10. பட்டுக்கோட்டை
    வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மரக்கன்று நடும்பணி..!