தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்

தட்டான்குட்டை  குப்பாண்டபாளையம்  ஊராட்சி கிராமசபா கூட்டம்

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் ஊராட்சிகள் சார்பில் கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றன

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் ஊராட்சிகள் சார்பில் கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றன.

உலக தண்ணீர் தினத்தில் தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் கிராம சபா கூட்டம் தலைவி புஷ்பா தலைமையில் நடைபெற்றது.

இதில் வான் தரும் மழை நீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறு சுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுபாட்டை தடுத்தல், மரம் வளர்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீர் நிலைகளின் தண்ணீர் சேகரமாக உள்ள கால்வாய்களை தூர் வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தல்.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் போது நிதி செலவினை குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை விபரம், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், எடுக்கப்பட்ட பணிகள் முன்னேற்றம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் தன்மை குறித்த விழிப்புணர்வு, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிறு தானிய உற்பத்தி, அதன் தன்மை குறித்த விழிப்புணர்வு என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் உலக தண்ணீர் தினம் குறித்த கிராம சபா கூட்டம் மாரியம்மன் கோவில் திடலில் தலைவி கவிதா தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய தலைப்புகளின் கீழ் விவாதங்கள் நடைபெற்று, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags

Next Story