சாலையின் டிவைடரில் ஏறி நின்ற அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
குமாரபாளையத்தில் உள்ள புறவழிச்சாலையின் டிவைடரில் ஏறி நின்ற அரசு சொகுசு பஸ்.
குமாரபாளையத்தில் உள்ள புறவழிச்சாலையில் அரசு சொகுசு பஸ் டிவைடர் மீது ஏறி நின்றதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள சேலம், கோவை புறவழிச்சாலையில், கவுரி தியேட்டர் பின்புறம், நேற்றுமுன்தினம் அதிகாலை 03:00 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி அரசு சொகுசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அங்குள்ள டிவைடர் மீது ஏறி நின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகள் கீழே இறங்கினர். அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடம் வந்து பயணிகள் உள்ளிட்டவர்களை மீட்டனர்.
அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவி செய்தனர். அதன்பின் இழுவை இயந்திரம் கொண்டுவரப்பட்டு பஸ்ஸை மீட்டனர். இது குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
அனுமதி இல்லாமல் மது விற்ற இருவர் கைது
குமாரபாளையம் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், சந்தியா, எஸ்.எஸ்.ஐ.க்கள் முருகேசன், குணசேகரன், ஏட்டுகள் ராம்குமார் உள்பட பலர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம் சாலை சிட்டி யூனியன் வங்கி அருகில்,மது விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்தனர்.
அதே போல் பழைய முருகன் தியேட்டர் பகுதியில் மது விற்ற நபரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து தலா 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த ரமேஷ்கண்ணன், (34), குமாரபாளையத்தை சேர்ந்த சுப்ரமணி, (62), என்பது தெரியவந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu