குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறாக சரக்கு வாகனங்கள்

குமாரபாளையத்தில்  போக்குவரத்து இடையூறாக சரக்கு வாகனங்கள்
X

குமாரபாளையத்தில் பகலில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

குமாரபாளையத்தில் பகலில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் ஏராளமான வியாபார நிறுவனங்கள் உள்ளன. இவைகளில் சரக்குகளை இறக்க ஆங்காங்கே லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் பகல் நேரத்தில் சாலையின் குறுக்கே, வாகனங்களை நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர். இதனால் குறுகிய சாலைகளில் வரும் பஸ், லாரிகள், கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சரக்குகள் இறக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

வங்கி முன் நிறுத்தப்படும் டூவீலர்களால் போக்குவரத்து இடையூறு

குமாரபாளையம் சேலம் சாலையில் தான் பெரும்பாலான வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு முன் டூவீலர்களை நிறுத்தி வைக்கிறார்கள். ஒரு நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்த, போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தி தரவேண்டும். ஆனால் இந்த வங்கி நிர்வாகத்தினர் இது பற்றி சற்றும் கவலை படாமல் உள்ளனர். குறுகிய அளவிலான சாலையில் டூவீலர்கள் அதிகம் நிறுத்தப்படுவதால் வாகனங்கள் செல்ல மிகவும் இடையூறு ஏற்படுகிறது. அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். விபத்துக்களை தடுத்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பலனாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம் சாலை டிவைடர்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒளிரும் விளக்குகள் மற்றும் ஒளிரும் தகடுகள் பொருத்தப்பட்டன. இவைகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒளிரும் போர்டுகளின் மீது கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட விளம்பர பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் சாலையில் உள்ள டிவைடர்களில் விபத்துக்களை தடுக்க ஒளிரும் விளக்குகள், முக்கிய சாலை சந்திப்புகளில் ஒளிரும் தகடுகள் மற்றும் பிரிவு சாலைகளில் பதிக்கும் வகையிலான ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டன. சில நபர்கள் இதன் உபயோகம் தெரியாமல், கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட விளம்பர பிளெக்ஸ் பேனர்களை வைக்கிறார்கள். இதனால் விபத்து அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எந்த நோக்கத்திற்காக ஒளிரும் போர்டுகள் வைக்கப்படுகிறது என்பது அறியாமல் அலட்சியப்படுத்தும் நோக்கத்தில் பிற போர்டுகள் வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
ai in future agriculture