பிரதமர், முதல்வருக்கு விநாயகர் சிலைகள் : விஸ்வ ஹிந்து பரிஷத் அனுப்பி வைப்பு

பிரதமர், முதல்வருக்கு விநாயகர் சிலைகள் : விஸ்வ ஹிந்து பரிஷத் அனுப்பி வைப்பு
X

பள்ளிபாளையம் தபால் நிலையத்தில் தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் தமிழக முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு விநாயகர் சிலை அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் தமிழக பிரதமர், முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு விநாயகர் சிலை அனுப்பி வைக்கப்பட்டது.

குமாரபாளையம் :

தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் தமிழக முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு விநாயகர் சிலை அனுப்பி வைக்கப்பட்டது.

வீட்டிற்குள் விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்திரவிட்டிருந்தது. வீட்டிற்குள் வைத்து விநாயகரை எப்படி வழிபடுவது என்று விளக்குங்கள் என, தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய ஜனாதிபதி, இந்திய பிரதமர் ஆகியோருக்கு விநாயகர் சிலைகளை பார்சல் மூலம் அனுப்பும் நிகழ்வு, பள்ளிபாளையம் தபால் நிலையத்தில் கோட்ட செயலாளர் சபரிநாதன் தலைமையில் நடைபெற்றது.


இது குறித்து சபரிநாதன் கூறியதாவது:

நான்கு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி எவ்வாறு நடக்கிறதோ, அதே போன்று தமிழகத்திலும் நடைபெற அனுமதி வழங்க வேண்டும். வீட்டிற்குள் வைத்து விநாயகரை வழிபடுவது எப்படி என்று கூற வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் கொண்ட மனு விநாயகர் சிலையுடன் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare