/* */

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு

பவானி தொகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பரிசு
X

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகளுக்கு தாசில்தார் முத்துகிருஷ்ணன் நேரில் பரிசு வழங்கினார்.

செப்டம்பர் 12 ம் தேதி பவானி தொகுதிக்குட்பட்ட பவானி, அம்மாபேட்டை, பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திகொள்வோருக்கு தங்க நாணயம், வெள்ளி விளக்கு, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என வருவாய்த்துறையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டையை சேர்ந்த வாசுதேவன், கூத்தம்ப்பட்டியை சேர்ந்த சென்னாக்கவுண்டர் ஆகியோருக்கு தலா ஒரு கிராம் தங்க காசு வழங்கப்பட்டது. சொக்காரம்மன் நகரை சேர்ந்த வசந்தாமணி, சுல்லிமேட்டை சேர்ந்த கார்த்தி ஆகியோருக்கு வெள்ளி விளக்குகளும், மேலும் 10 பேர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள வேட்டி, சேலைகள், மூன்று பேருக்கு 400 ரூபாய்க்கு ரீ சார்ஜ் கூப்பன் வழங்கப்பட்டது. இதனை பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் சரவணன் மற்றும் அலுவலர்கள் அதிர்ஷ்டசாலிகள் இருப்பிடத்திற்கே சென்று வழங்கினார்கள்.

Updated On: 17 Sep 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு