குப்பைகள் வாய்க்காலில் தேங்குவதால் கடைமடைக்கு நீர் தாமதம்: விவசாயிகள் கவலை
நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ள செடி கொடிகள்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே குப்பைகள் வாய்க்காலில் தேங்குவதால் கடைமடை வரை நீர் பாய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.
இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:
குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் முதல் வாத்தியார் காடு காட்டுவளவு வரை, மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் செடி கொடிகள், அருகில் உள்ள மரங்களின் கிளைகள் ஆகியவற்றால் தண்ணீரில் அடித்து வரும் குப்பைகள் யாவும் தேங்கி, நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக வாய்க்காலில் தண்ணீர் வராத நிலையில், அப்போதெல்லாம் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகள், புதர்களை அகற்றாமல், தூர் வாராமல் விட்டு விட்டு, தண்ணீர் திறந்து விடும் இரு நாளைக்கு முன்பு அவசர,அவசரமாக தூர் வாருகிறோம் என்று பெயரவில் சுத்தம் செய்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் காண்பிக்கப்பட்டது
. அதன் பாதிப்பு தற்போது, கடைமடை வரை தண்ணீர் பாயாத நிலை ஏற்பட்டுள்ளது. சில நாட்களில் தண்ணீர் நிறுத்தும் நிலை உருவாக உள்ளது. இரண்டு ஆண்டுகல் கழித்து வந்தாலும் கடைமடை விவசாயிகளுக்கு பலனில்லாமல் போகிறது. இந்த புதர்களை அகற்றி, தண்ணீர் கடைமடை வரை பாய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu