/* */

குமாரபாளையத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

குமாரபாளையத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
X

கஞ்சாவுடன் பிடிபட்டவர்கள். 

குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை பகுதியில், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவை பக்கமிருந்து சேலம் நோக்கி இரு கார்கள் வேகமாக வந்தன. அந்த இரு கார்களை நிறுத்தி விசாரித்த போது, அதில் இருந்த நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இரண்டு கார்களின் டிக்கியில் தலா 4 பாலிதீன் மூட்டைகள் இருந்தன.

விசாரணையில், அவை கஞ்சா என்பதும், சேலத்திற்கு கொண்டு போகபட்டது என்றும் தெரிய வந்தது. 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வந்த கோவையை சேர்ந்த கிஷோர்குமார், 25, அப்துல்ஜலிஸ், 33, முஜிபுர்ரஹ்மான், 29, சுல்தான், 30, ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த குமார், கோவையை சேர்ந்த கவுதம், பாஷா, முகமது அலி, வரசநாட்டை சேர்ந்த பார்த்திபன், சந்திரமோகன், தனுஷ்கோடி, தனுஷ்கோடியின் மாமா ஊத்துக்குளியை சேர்ந்த அன்னக்கொடி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் ஏ.டி.எஸ்.பி. செல்லபாண்டியன், திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், டி.எஸ்.பி. லட்சுமணன் விசாரணை செய்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Updated On: 12 Jan 2022 3:59 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்