குமாரபாளையத்தில் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் மகாத்மா காந்தி சமூக சேவை மையம் சார்பில் நடந்த 155 வது ஆண்டு காந்தி ஜெயந்தி விழாவில் சுதந்திர போராட்ட தியாகியின் வாரிசு ராஜேந்திர பிரசாத் வாழ்த்தி பேசினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு பகுதியில் மகாத்மா காந்தி சமூக சேவை மையம் சார்பில் 155 வது ஆண்டு காந்தி ஜெயந்தி விழா தலைவர் காந்தி நாச்சிமுத்து தலைமையில் நடைபெற்றது.
எக்ஸெல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் தலைமை, எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலமுருகன், கவிஞர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். ஓய்வு பெற்ற உதவி திட்ட இயக்குனரும் சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசுமான ராஜேந்திர பிரசாத் தேசிய கொடி ஏற்றினார்.
மகளிர் குழு செயலாளர் விஜயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றினார். சடையம் பாளையம் பங்குத்தந்தை ஸ்டீபன் சொரூபன் காந்தி படத்தை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்தார்.
குமாரபாளையம் நகர் மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, குமாரபாளையம் ரோட்டரி சங்கத் தலைவர் சந்திரன் பங்கேற்று, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாணவிகள் பிரியதர்ஷினி, பூஜா ஸ்ரீ புகழ்யா ஸ்ரீ , தமிழரசி ஆகியோருக்குப் பரிசு வழங்கி பாராட்டினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்சிகள் நடந்தது. இதில் சுதந்திர போராட்ட வீரர்கள் போல் வேடமிட்டு வந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu