குமாரபாளையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம்: பொதுமக்கள் தவிப்பு

குமாரபாளையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம்: பொதுமக்கள் தவிப்பு
X

பைல் படம்

குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையால் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையால் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மாநில அளவில் முதன் முதலாக குமாரபாளையம் நகராட்சியில் புதைவட மின் கம்பிகள் அமைக்கப்பட்டன. இதன் சோதனை ஓட்டம் என்ற பெயரில் நகரில் அடிக்கடி மின்தடை செய்து வருகின்றனர். இதனால் ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. விசைத்தறி தொழிலாளர்கள் வருமானம் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

மேலும் பல்வேறு வியாபார நிறுவனத்தார் தங்கள் வியாபாரம் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பெரிதும் பாதிக்கப்படுகிறது என புகார் கூறி வருகின்றனர். நேற்று மாலை 02:00 மணி முதல் 05:00 மணி வரை மூன்று முறை மின் தடை ஏற்பட்டு சுமார் இரண்டரை மணி நேரம் மின் விநியோகம் இல்லாத நிலை ஏற்பட்டது.

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தொடர் மின்வெட்டால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். குமாரபாளையம் மின்வாரிய அலுவலக நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.

இது பற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின் தடை என்பது, ஒரு மின்கடத்தியின் ஒரு புள்ளியில் இருந்து அதன் மறு புள்ளியை மின்னோட்டம் அடையும் போது இடையில் ஏற்படும் மின் சேதாரம் ஆகும். இவை மின் கடத்தியின் நீளம் அதன் பருமன் மற்றும் இந்த இரு புள்ளிகளுக்கும் இடையில் ஏற்படும் பிற மின் தடை போன்றவற்றினால் ஏற்படும் மின் சேதாரத்தை ஓமின் விதிப்படி ஓம் என்ற அலகில் அளக்கபடுகின்றன.

உதாரணமாக மின்னழுத்தத்தின் அளவு, மின் கடத்தியின் நீளம் மற்றும் பருமன், இரண்டு புள்ளிக்கும் இடையில் ஏற்படும் மின் கடத்த கூடிய கம்பிகள் இணைப்பு, ஒழுங்கற்ற இணைப்பு, வெப்பம், மற்றும் ஈரலிப்பான மரங்கள் மின் கடத்தியில் உராய்வு போன்றவற்றினால் மின் சேதாரம் ஏற்படுகின்றன. இது போன்ற தாக்கங்களின் மூலம் மின்தடை ஏற்படுகின்றன. இவை மாறுதிசை மின்னோட்டம் மற்றும் நேர் மின்னோட்டம் என்பவற்றில் மாறுபடும். இதன் படி மின்தடை ஒரு குறுகிய பருமனான மின் கடத்தியை விட ஒரு மெல்லிய நீண்ட மின் கடத்தி மின்தடையை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக அனைத்து கடத்திகளுக்கும் மின்தடை உண்டு. ஆனால் குறைந்த வெப்பநிலையில் மீக்கடத்துத்திறனை வெளிபடுத்தும் கடத்திகளின் மின்தடை சுழி மதிப்பினை அடைந்து அத்திறனுடன் எவ்வித தடையும் இன்றி மின்னோட்டதை கடத்தும்.

ஒரு கடத்தியின் மின்தடை என்பது அதன் இருமுனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்ததிற்கும் (V) அக்கடத்தியின் வழியாகப் பாயும் மின்னோட்டத்திற்கும் (I) இடையேயான விகிதம் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?