விடுதலைப்போராட்ட வீரர் செண்பகராமன் பிறந்தநாள் விழா

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் விடுதலை வீரர் செண்பகராமன் பிள்ளை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை பிறந்தநாள் விழா, அரசு உதவி பெறும் ஜே.கே.கே. ரங்கம்மாள் ஆரம்பப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமை ஆசிரியை செல்லம்மா தலைமை வகித்தனர்.
செயலர் பிரபு பேசியதாவது:செண்பகராமன் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி்ஆவார். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே ஆங்கிலேயர்களை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர். வந்தே மாதரம் என உரிமை முழக்கமிட்டார்.
விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை எழுப்பினார். ஜெய்ஹிந்த் எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இதை முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி தங்கராஜ் வழங்கி வாழ்த்தினார். பள்ளி ஆசிரியைகள் தேவகி, கார்த்திகேயினி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu