இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா போட்டிகளில் பரிசுவென்ற மாணவர்கள்
குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த தின விழா தலைமை ஆசிரியை சுகந்தி, அமைப்பளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது. இரட்டைமலை சீனிவாசன் குறித்து பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு, வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் ராணி, ரூத், ஜமுனா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இவரை பற்றி தலைமை ஆசிரியை சுகந்தி கூறியதாவது: திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர்.
இரட்டைமலை சீனிவாசன் 1939 இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu