அரசு பள்ளிகளின் குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா

பிரபாத் நாராயணன் பொதுநல அமைப்பின் சார்பாக இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.
குமாரபாளையத்தில் பிரபாத் நாராயணன் பொதுநல அமைப்பின் சார்பாக இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.
பிரபாத் நாராயணன் பொதுநல அமைப்பின் சார்பாக, 19ம் ஆண்டாக இலவச சீருடை வழங்கும் விழா பிரபாத் மகேந்திரன் தலைமையில் நடந்தது. குமாரபாளையம், பவானி, ஜம்பை பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், பவானி நகராட்சி தலைவி சிந்தூரி இளங்கோவன், ஜே கே கே கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயபிரகாஷ், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம், நாகராசன், சீனிவாசன், செல்வம், பொறியாளர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய சுதந்திர தினம் குறித்து பொதுநல ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரி களும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர் முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu