அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்!
படவிளக்கம் : பள்ளிபாளையம் அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் ஆவாரங்காடு துவக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமினை பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், துணை தலைவர் பாலமுருகன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் செல்வம், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி, வட்டார வள மேற்பார்வையாளர் மா.கனகராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் காமாட்சி மற்றும் குணசேகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இம்முகாமில் 0 - 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 113 பேர் கலந்து கொண்டனர். 23 பேருக்கு புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 30 மாணவர்களின் தேசிய அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 6 மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். 7 மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டனர்.
இம்மருத்துவ முகாமில் குழந்தைகள் நலம், எலும்பு, மூட்டு பிரிவு, மனநலம், காது மூக்கு தொண்டை கண் பிரிவு மருத்துவர்கள் மற்றும் மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர்கள் ஆகியோர் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி உரிய உதவிகள் மேல் கட்ட சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.
இம்முகாமில் ஆவாரங்காடு பள்ளியின் தலைமை ஆசிரியர் லோகநாயகி , வட்டார ஒருங்கிணைப்பாளர் செ.குணசேகரன் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் , இயன் முறை மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu