குமாரபாளையம் நோபில் ஹோண்டா நிறுவனம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையம் நோபில் ஹோண்டா நிறுவனம்  சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

 குமாரபாளையம் நோபில் ஹோண்டா நிறுவனத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் நோபில் ஹோண்டா நிறுவனத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம்:

ஆண்டுதோறும் குமாரபாளையம் நோபில் ஹோண்டா நிறுவனம் சார்பில் கண் மருத்துவம், இதய நோய், மகளிர் நலன், குழந்தைகள் நலன் மற்றும் பொது மருத்துவ முகாம்கள் நடத்துவது வழக்கம்.

நேற்று ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து நோபில் ஹோண்டா நிறுவனம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர் சேரபூபதி மற்றும் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். இதில் பொதுமக்கள் 120 பேர் பங்கேற்று பயன் பெற்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஐ.ஒ.எல். லென்ஸ் பொருத்தும் சிகிச்சைக்கு 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேல் சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் மேலாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!