JKKN பல் மருத்துவமனை சார்பில் பள்ளிபாளையத்தில் நாளை இலவச பல்மருத்துவ முகாம்

JKKN பல் மருத்துவமனை சார்பில் பள்ளிபாளையத்தில் நாளை இலவச பல்மருத்துவ  முகாம்
X

JKKN பல்மருத்துவ முகாம் (மாதிரி படம்)


JKKN பலதுறை பல் மருத்துவமனை சார்பில் நாளை மாபெரும் இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம் பள்ளிபாளையத்தில் நடக்கவுள்ளது.

JKK நடராஜா நினைவு இயக்கம் மற்றும் JKKN பலதுறை பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம் பள்ளிபாளையத்தில் நடக்கவுள்ளது.

நாள் : நாளை (15ம் தேதி ஞாயிறு)

இடம் : புதன்சந்தை அருகில் உள்ள ஸ்ரீ மெடிக்கல்

நேரம் : காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை

இந்த இலவச முகாமில் பல் சொத்தை, பற்களில் இரத்தம் வடிதல், ஈறுகளில் சீழ் வடிதல், வாய் துர்நாற்றம், சீரற்ற பல்வரிசை, வாய் புற்று நோய், பல் அடைத்தல், ஈறு சுத்தம் செய்தல், பல் நீக்கம் செய்தல், செயற்கை பல் பொருத்துதல், குழந்தைகளுக்கான பல் சிகிச்சை,பற்கள் சீரமைப்பு போன்றவைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.

பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள JKKN பலதுறை பல் மருத்துவமனை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!