J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி..!

J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி..!
X

J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவுக்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவரும், J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியின் செயலாளருமான ஸ்ரீமதி. செந்தாமரை மற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமாரபாளையம் J.K.K.ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவரும், பள்ளியின் செயலாளருமான ஸ்ரீமதி. செந்தாமரை கலந்து கொண்டு 185 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி, செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோருக்கு J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!