குமாரபாளையம் அருகே நலத்திட்டப் பணிகளுக்கு முன்னாள் அமைச்சார் பூமி பூஜை
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனங்கூர் ஊராட்சி பகுதியில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்து பூமி பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனங்கூர் ஊராட்சி பகுதியான, பழையபாளையம் பகுதியில் சுமார் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி கொண்டு வந்தார்.
இதேபோல் ஆனங்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிக்காடு பகுதியில் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலையோர வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது பொதுமக்கள் தங்களது பல்வேறு குறைகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி இடம் தெரிவித்தனர். விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன், ஆனங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரவேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu